ஆப்நகரம்

ரூ.10,000 பணம் போட்டிருந்தால் இப்போ 1.5 லட்சம் ரூபாய் லாபம்.. இந்த பங்கு உங்களிடம் இருக்கா?

வெறும் மூன்றே ஆண்டுகளில் 14 மடங்கு லாபத்தை அள்ளி கொடுத்த ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்கு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 11 Apr 2023, 7:40 pm
ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்கு (Olectra Greentech share) கடந்த சுமார் மூன்றே ஆண்டுகளில் 14 மடங்கு லாபத்தை அள்ளி கொடுத்துள்ளது. அதன்படி, இந்த பங்கில் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் கூட இப்போது 1.5 லட்சம் ரூபாயாக மாறி இருக்கும்.
Samayam Tamil cash
cash


பங்கு சந்தையில் பல மடங்கு லாபத்தை கொடுத்த பங்குகள் மல்டிபேக்கர் பங்குகள் (Multibagger stocks) எனப்படுகின்றன. அவ்வகையில், பல மடங்கு லாபத்தை கொடுத்த பங்குதான் ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்கு. கடந்த மூன்றே ஆண்டுகளில் 1400% லாபத்தை இந்த பங்கு கொடுத்துள்ளது.

கடந்த ஒரே மாதத்தில் கூட ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்கு 9% லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்த பங்கு 25% லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்கு விலை 218 ரூபாயில் இருந்து 648 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆக இரண்டே ஆண்டுகளில் 200% லாபத்தை ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்கு கொடுத்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில்தான் ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்கு உண்மையான ஆட்டத்தையே காட்டி இருக்கிறது. மூன்று ஆண்டுகளில் ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்கு விலை 44 ரூபாயில் இருந்து 648 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது 3 ஆண்டுகளில் ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்கு 1400% உயர்ந்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்கில் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 1.5 லட்சம் ரூபாயாக மாறி இருக்கும். ஜனவரி மாதத்தில் ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்கில் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 12,500 ரூபாயாக மாறி இருக்கும்.

2 ஆண்டுகளுக்கு முன் ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்கில் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 30,000 ரூபாயாக மாறி இருக்கும். தற்போது ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்கு விலை 651.85 ரூபாயாக உள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்