ஆப்நகரம்

மிகப்பெரிய டெபாசிட்டரி சேவை நிறுவனம் NSDL... ஐபிஓ மூலம் ரூ.4,500 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது!

டெபாசிட்டரி சட்டம் அமலுக்கு வந்த பிறகு 1996-ல் என்எஸ்டிஎல் இணைக்கப்பட்டது. நிறுவனம் முதன்மை சந்தைகளில் இருந்து ரூ.16,000-17,000 கோடி மதிப்பீட்டில் ரூ.4,500 கோடி திரட்ட வாய்ப்புள்ளது.

Samayam Tamil 22 Jun 2022, 2:51 pm
இந்தியாவின் முதல் மிகப்பெரிய டெபாசிட்டரி சேவை நிறுவனமான, நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி (என்எஸ்டிஎல்) அதன் முதன்மை பங்கு விற்பனை மூலம் ரூ.4,500 கோடி திரட்ட உள்ளது.என்எஸ்டிஎல் முதலீட்டு வங்கிகளுடன் ஆரம்ப பொதுப் பங்களிப்பை (ஐபிஓ) தொடங்குவதற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
Samayam Tamil ipo


மே 31, 2022 நிலவரப்படி, ரூ.297.55 லட்சம் கோடி டிமேட் கணக்குகளில் 2.76 கோடி முதலீட்டாளர் கணக்குகளை நிறுவனம் நிர்வகிக்கிறது. டிமேட் சொத்து மதிப்பின் அடிப்படையில் 89 சதவீதத்துக்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. டெபாசிட்டரி சட்டம் அமலுக்கு வந்த பிறகு 1996ல் என்எஸ்டிஎல் இணைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நிறுவனம் முதன்மை சந்தைகளில் இருந்து ரூ.16,000-17,000 கோடி மதிப்பீட்டில் ரூ.4,500 கோடி திரட்ட வாய்ப்புள்ளது.

அறிக்கையின்படி, NDSL பல்வேறு உள்நாட்டு மற்றும் உலகளாவிய முதலீட்டு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போதுள்ள முதலீட்டாளர்களுக்கு வெளியேறும் வகையில், இரண்டாம் நிலை பங்குகளை விற்பனை செய்வதையே முக்கியமாகக் கொண்டிருக்கும்.

ஐடிபிஐ வங்கி மற்றும் தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தில் முறையே 26 சதவீதம் மற்றும் 24 சதவீத பங்குகளை வைத்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கனரா வங்கி ஆகியவை மற்ற முக்கிய பங்குதாரர்களாக உள்ளன.

NSDL இன் மற்ற பங்குதாரர்களில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (SUUTI), ஹெச்டிஎஃப்சி வங்கி, சிட்டி பேங்க், ஹெச்எஸ்பிசி, எஸ்சிபி, டச் பேங்க், கோடக் மஹிந்திரா ஆயுள் காப்பீடு மற்றும் IIFL சிறப்பு நிதிகளை வைத்துள்ளன. NSDL க்கு முன், அதன் சக மத்திய டெபாசிட்டரி சேவைகள் (இந்தியா) சிடிஎஸ்எல் 2017 இல் பொதுவில் சென்றது. அதன் வெளியீடு 170 மடங்கு அதிகமாக சந்தா செலுத்தப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்