ஆப்நகரம்

சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்தது..FMCG, IT துறைகளில் அதிக விற்பனை!

பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

Samayam Tamil 7 Jun 2022, 10:44 am
வாரத்தின் 2 வது வர்த்தக நாளான பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் சரிந்தன. ஒட்டுமொத்த உலகளாவிய குறிப்புகளால், நம்பிக்கையில்லாத உணர்வுகள் முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலர் அதிகரிப்பு ஆகியவை இன்றைய வர்த்தகத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய பங்காற்றின.
Samayam Tamil sensex crash


அதேபோல், நாளை காலை திட்டமிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை முடிவை வர்த்தகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவும் இன்றைய வீழ்ச்சியின் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கன்சுயூமர் எஃப்எம்சிஜி, ஐடி மற்றும் ஃபைனானசியல் துறைகள் அதிக விற்பனையைக் கண்டன. பிஎஸ்இயின் சென்செக்ஸ் 532.75 புள்ளிகள் அதாவது 0.96 சதவீதம் சரிந்து 55,227.21 ஆக இருந்தது. நிஃப்டி50 158.85 புள்ளிகள் அதாவது 0.96 சதவீதம் சரிந்து 16,410.70 ஆக இருந்தது.

நிஃப்டி குறியீட்டில் ஐந்து கவுன்டர்கள் மட்டுமே பச்சை நிறத்தில் வர்த்தகமாகின. ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, ஹிண்டால்கோ மற்றும் ரிலையன்ஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை இன்று லாபத்தில் உள்ளனர்.

மறுபுறம் நஷ்டமடைந்த கவுன்டர்களில் டைட்டன் 4 சதவீதம் சரிவுடன் முதலிடத்தில் உள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், அப்பல்லோ மருத்துவமனை ஆகியவை சரிவில் உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்