ஆப்நகரம்

ஒரு பங்கு விலை ரூ.50,000.. உச்சத்தில் பேஜ் இண்டஸ்ட்ரீஸ்.. வாங்கலாமா?

லாபம் பல மடங்கு உயர்ந்ததால் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Samayam Tamil 12 Aug 2022, 3:22 pm
மிக காஸ்ட்லியான பங்குகளில் ஒன்றான பேஜ் இண்டஸ்ட்ரீஸ் (Page Industries) பங்கு விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று வர்த்தகத்தில் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 50350 ரூபாய் உச்சத்தை தொட்டுள்ளது.
Samayam Tamil page industries


ஆடை நிறுவனமான பேஜ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஜூன் காலாண்டு வருமான முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், பேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து பங்கு விலை கடகடவென உயர்ந்துள்ளது.

ஜூன் காலாண்டில் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 207 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2021 ஜூன் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 10.9 கோடி ரூபாய் மட்டுமே. எனவே, லாபம் சுமார் 20 மடங்கு மேல் உயர்ந்ததால் இன்று பேஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

விமான நிறுவனங்களின் பங்குகள் திடீர் ஏற்றம்.. காரணம் என்ன?
பேஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 52000 ரூபாய் வரை போகலாம் என ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனம் டார்கெட் வைத்துள்ளது. நீண்டகால அடிப்படையில் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எல்லா பிரிவுகளிலும் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.

2023ஆம் ஆண்டில் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் தயாரிப்புகளுக்கு தொடர்ந்து அதிக டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆக்சிஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளாடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மேலும், பிரபல ஜாக்கி (Jockey) நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஓமான், கத்தார், மாலத்தீவு, பூட்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் விற்பனை செய்வதற்கான உரிமமும் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்