ஆப்நகரம்

IRCTC Dividend: ஐஆர்சிடிசி பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட்.. எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

ஐஆர்சிடிசி நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் செலுத்துவதாக அறிவித்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 10 Feb 2023, 10:40 am
ரயில் டிக்கெட் புக்கிங் மற்றும் கேட்டரிங் சேவைகளை வழங்கி வரும் ஐஆர்சிடிசி (IRCTC) நிறுவனம் டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர் காலாண்டில் நிகர லாபம் 22.37% அதிகரித்து 255.53 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
Samayam Tamil irctc share
irctc share


இதுமட்டுமல்லாமல் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் வருவாய் 69.95% அதிகரித்து 918.06 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கேட்டரிங் தொழில் வாயிலாக வரும் வருமானம் மட்டும் 276.6% அதிகரித்து 394.15 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. எனினும், டிக்கெட் சேவை பிரிவு வாயிலான வருமானம் 3.79% சரிந்து 301 கோடி ரூபாயாக குறைந்துள்ளது

டிவிடெண்ட்


ஐஆர்சிடிசி பங்குதாரர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் 3.50 ரூபாய் டிவிடெண்ட் செலுத்துவதற்கு ஐஆர்சிடிசி நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற ஐஆர்சிடிசி நிர்வாக குழு கூட்டத்தில் 3.50 ரூபாய் டிவிடெண்ட் செலுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

டிவிடெண்ட் செலுத்துவதற்கான பதிவு தேதி (Record date) பிப்ரவரி 22ஆம் நாள் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. அதாவது, பிப்ரவரி 22ஆம் தேதி யாரிடமெல்லாம் ஐஆர்சிடிசி பங்குகள் இருப்பதாக பதிவுகளில் இருக்கிறதோ அவர்கள் அனைவருக்கும் ஒரு பங்குக்கு 3.50 ரூபாய் டிவிடெண்ட் கிடைக்கும்.

மேலும், டிவிடெண்ட் செலுத்துவதற்கான தேதி மார்ச் 9ஆம் நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 9ஆம் தேதி ஐஆர்சிடிசி பங்குதாரர்களின் வங்கிக் கணக்கிற்கே ஒரு பங்குக்கு 3.50 ரூபாய் டிவிடெண்ட் நேரடியாக செலுத்தப்பட்டுவிடும்.

ஐஆர்சிடிசி பங்கு

இன்று பங்கு வர்த்தகத்தில் ஐஆர்சிடிசி பங்கு விலை 1% மேல் சரிந்து 642.80 ரூபாய் அளவில் உள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்