ஆப்நகரம்

மீண்டும் வட்டியை உயர்த்திய ரிசர்வ் வங்கி.. சென்செகஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

இன்று காலை ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50% உயர்த்தியதைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தை 400 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பித்துள்ளது.

Samayam Tamil 30 Sep 2022, 11:15 am
இன்று இந்திய ரிசர்வ் வங்கி மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஏறகனவே இரண்டு முறை ரிசர்வ் வங்கி வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து இன்று மீண்டும் 0.50% ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
Samayam Tamil dalal street


அதனைத் தொடர்ந்து இன்று இந்திய பங்குச் சந்தையில் ஆரம்ப வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 400 புள்ளிகளும், என்எஸ்இ நிஃப்டி 16,900 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்துள்ளது.

இன்று காலை 10:15 மணிக்கு பிஎஸ்இ சென்செக்ஸ் முந்தைய முடிவில் இருந்து 0.75% உயர்ந்து 58,846.07 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 123.50 (0.73%) புள்ளிகள் உயர்ந்து 16,941.30 புள்ளிகளுடனும் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது.

https://tvid.in/sdk/embed/embed.html#apikey=tamilweba5ec97054033e061&videoid=1xr1bi19gg&height=360&width=640

இந்தியாவில் பணவீக்கம் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில், கடந்த இரு தினங்களாக ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், கூட்டத்தின் முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் இன்று காலையில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 0.50% உயர்த்தப்பட்டு 5.9% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல SDF விகிதம் 5.65% ஆகவும், MSF விகிதம் 6.15% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்