ஆப்நகரம்

பங்குச் சந்தைக்கு நல்ல காலம்... உயர்வுடன் முடிவு

இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 385 புள்ளிகள் உயர்வு. நிஃப்டி 17050 புள்ளிகளை தொட்டது.

Samayam Tamil 23 Dec 2021, 5:23 pm
இன்றைய பங்குச் சந்தை நிறைவு நாள் வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ், என்பிஎஃப்சி ஆகியவற்றின் பங்குகள் சென்செக்ஸ் 385 புள்ளிகள் உயர வழிவகுத்தன. நிஃப்டி 17050 புள்ளிகளை தொட்டது. ஃகாட்டி சோர்ஸ், 15 சதவீதமும், எம்எம்டிசி 10 சதவீதமும் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தன.
Samayam Tamil sensex and nifty


பங்குச் சந்தைகள் வாரத்தின் நான்காவது நாளான இன்று ஏற்றத்தில் முடிவடைந்தன. தொடர்ந்து மூன்று நாட்கள் வளர்ச்சியடைந்த பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 385 புள்ளிகள் அதிகரித்து 57316 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி 118 புள்ளிகள் உயர்ந்து 17073 புள்ளிகளாகவும் உயர்ந்து வர்த்தகம் முடிவடைந்தது. இன்ஃபோசிஸ், என்பிஎஃப்சி பங்குகள் இன்றைய சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வடைய பெரும் பங்காற்றின.

இன்றைய லாபம் அடைந்த பங்குகளில் எம்எம்டிசி பங்குகள் 9 சதவீதம் அதிகரித்து பங்கு ஒன்று 47 ரூபாயிலும், ஃபர்ஸ்ட் சோர்ஸ் 9 சதவீதம் அதிகரித்து பங்கு 175 ரூபாயிலும் விற்பனையாகின. இதேபோல், ஜே பி கெமிக்கல்ஸ் மற்றும் ஜிஇ சிப்பிங் ஆகிய பங்குகள் லாபத்தில் வர்த்தமாகின

மறுபுறம் டிசிஐ எக்ஸ்பிரஸ் 5 சதவீதம் குறைந்து பங்கு ஒன்று 2383 ரூபாய்க்கு விற்பனையாகி நஷ்டத்தை சந்தித்தன. ஃப்யூச்சர் ரிடெயில், டாடா டெலி, ஜி எண்டர்டெயின்மெண்ட் பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.

நிஃப்டி கடந்த ஆறு நாட்களில் கழித்து இன்று 17000 புள்ளிகளுக்கு மேல் சென்றது. அதன் துறை குறியீடுகளில் அனைத்து துறைகளும் பச்சை நிறத்தில் வர்த்தகம் முடிவடைந்த நிலையில், india VIX 4.55 புள்ளிகள் சரிந்தன.

இதுபோன்ற கூர்மையான நுண்ணறிவு நிறைந்த, 20 க்கும் மேற்பட்ட துறைகளில், ஆழமான தகவல்களுக்கு பிரத்யேகமான எகனாமிக் டைம்ஸ் ப்ரைம் வெப்சைட்க்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்