ஆப்நகரம்

5-வது நாளாக பங்குச் சந்தையில் தொடரும் சோகம்...சென்செக்ஸ், நிஃப்டி சரிவு... ஸ்மால்கேப் பங்குகள் டாப்!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம்

Samayam Tamil 9 Jun 2022, 10:34 am
வாரத்தின் 4-வது வர்த்தக நாளான இன்று உள்நாட்டுப் பங்குச் சந்தை சரிவுடன் துவங்கியது. இது உலகளாவிய பங்குச் சந்தைகளின் பலவீனத்தைக் கண்காணித்தது. அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை இந்திய சந்தையின் உணர்வுகளை மேலும் பாதித்தது.
Samayam Tamil stock market news


வங்கி, ஐடி மற்றும் கன்சுயூமர் போன்ற குறியீட்டு ஹெவிவெயிட் துறைகளில் விற்பனை சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எரிசக்தி மற்றும் பார்மா பங்குகள் ஆரம்ப வர்த்தகத்தில் மீட்சியை காட்டின.

காலை 9.25 மணியளவில் பிஎஸ்இயின் சென்செக்ஸ் 248.37 புள்ளிகள் குறைந்து 54,644.12 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. நிஃப்டி 70 புள்ளிகள் குறைந்து 16.286.25 இல் வர்த்தகம் செய்யப்பட்டது.

பெரிய பங்குகளில், கிராசிம் 2 சதவீதம் சரிந்தது, அதேசமயம் பிரிட்டானியா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ் மற்றும் ஸ்ரீ சிமென்ட்ஸ் ஆகியவை குறியீடுகளை சரிந்த பங்குகளாகும்.

மறுபுறம், ஓஎன்ஜிசி மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் ஆகியவை தலா 2 சதவீதம் உயர்ந்தன. சிப்லா, என்டிபிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கோல் இந்தியா ஆகியவை பங்குச் சந்தையை ஆதரித்த பங்குகளாகும்.

பணவீக்கம் அதிகரிப்பு பற்றிய கவலைகளுக்கு மத்தியில் காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்தியா 5-9% உயர்த்தியுள்ளது. 2022-23 சந்தைப்படுத்தல் பருவத்தில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 100-523 வரை உயர்த்தப்பட்டது என்று வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த சந்தையில் பிஎஸ்இ ஸ்மால்கேப் இன்டெக்ஸ் ஏறக்குறைய சிறப்பாக வர்த்தகமாகி வருகின்றன. அதேசமயம் பிஎஸ்இ மிட்கேப் குறியீடு ஓரளவு சரிந்தது.

மிர்சா இன்டர்நேஷனல், பிஎல்எஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஆயில் இந்தியா ஆகியவை தலா 6-8 சதவீதம் அதிகரித்தன. ஐபிஓ கவுண்டர்களில், கார் டிரேட் டெக் மற்றும் ரோலெக்ஸ் ரிங்க்ஸ் 4 சதவீதம் வரை அதிகரித்தது. ஸ்டைலேம் இண்டஸ்ட்ரீஸ், 8 சதவீத வீழ்ச்சியுடன் நஷ்டத்தை சந்தித்தது.

தற்போதைய நிலவரப்படி, 10.30 மணியளவில் சென்செக்ஸ் 12 புள்ளிகள் அதிகரித்து 54904 புள்ளிகளாகவும், நிஃப்டி 13 புள்ளிகள் சரிந்து 16344 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்