ஆப்நகரம்

5 மடங்கு லாபம்.. டிவிடெண்ட் வருமானமும் உண்டு.. இந்த ஸ்மால் கேப் பங்கு உங்ககிட்ட இருக்கா?

ஸ்மால் கேப் பங்கான திரிவேனி டர்பைன் பங்கு விலை சுமார் 5 மடங்கு உயர்ந்தது மட்டுமல்லாமல் டிவிடெண்ட் வருமானமும் கொடுக்கிறது.

Samayam Tamil 2 Oct 2022, 2:51 pm
ஸ்மால் கேப் பங்கான திரிவேனி டர்பைன் (Triveni Turbine) பங்கு மல்டிபேகராக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை அள்ளி வழங்கியுள்ளது. மேலும் திரிவேனி டர்பைன் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு 1.13% டிவிடெண்ட் வழங்கி வருகிறது.
Samayam Tamil small cap


கடந்த சுமார் 30 மாதங்களில் திரிவேனி டர்பைன் பங்கு விலை சுமார் 368% உயர்ந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன. அப்போது திரிவேனி டர்பைன் பங்கு விலை சுமார் 50 ரூபாயாக இருந்தது.

எனினும், இதுவொரு நல்ல பங்காக கருதப்படுவதால் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை பங்கு வர்த்தகம் முடிந்தபோது திரிவேனி டர்பைன் பங்கு விலை 234.80 ரூபாய். இந்த பங்கு 52 வார உச்சத்தை தொட இன்னும் 11 ரூபாய் மட்டுமே உள்ளது.

கார் விற்பனை அமோகம்.. திடீர் மாற்றத்துக்கு காரணம் இதுதான்!
கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மட்டும் திரிவேனி டர்பைன் பங்கு சுமார் 50% உயர்ந்துள்ளது. ஒரு ஆண்டில் திரிவேனி டர்பைன் பங்கு 46.5% உயர்ந்துள்ளது. 2020 மார்ச் மாதம் இந்த பங்கு 50 ரூபாய் அளவில் இருந்தது. சொல்லப்போனால் 2020 மார்ச் 23ஆ தேதி இதன் விலை 49 ரூபாய் அளவில் இருந்தது.

அதன்பின் கடந்த சுமார் 2.5 ஆண்டுகளில் திரிவேனி டர்பைன் பங்கு விலை 368% உயர்ந்துள்ளது. சரியாக 30 மாதங்களில் திரிவேனி டர்பைன் பங்குதாரர்கள் 5 மடங்கு லாபம் பார்த்துள்ளனர். இதுபோக இந்நிறுவனம் 1.13% டிவிடெண்ட் வருமானமும் தருகிறது.

திரிவேனி டர்பைன் நிறுவனம் மின்சக்தி துறை மற்றும் தொழில்துறைக்கு டர்பைன்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்