ஆப்நகரம்

5 நாட்களில் பணக்காரர்களான.. பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்.. சும்மா இல்லை ரூ.10 கோடி லாபம்!

முதலீட்டாளர்கள் கடந்த 5 நாட்களில் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ரூ.10.46 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டி பணக்காரர்களாக மாறியுள்ளனர்.

Samayam Tamil 8 Apr 2023, 7:44 pm
பங்குச் சந்தை ஏப்ரல் மாதம் தொடங்கி பல விடுமுறை நாட்கள் விடுத்து சில நாட்கள் மட்டுமே செயல்பட்டுள்ளது. அதிலும் இந்தியப் பங்குச் சந்தை மார்ச் மாத சரிவுகளுக்குப்பின் ஏப்ரலில் பச்சைக் குறியீட்டுடனே வர்த்தகத்தை ஆரம்பித்தன.
Samayam Tamil Stock market


இந்நிலையில் தேசியப் பங்குச் சந்தை வெளியிட்ட அறிக்கையின்படி, பங்குச் சந்தை வர்த்தகத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் சுமார் ரூ.10.46 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டி, பணக்காரர்களாக மாறியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

BSE -இல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் கடந்த ஐந்து வர்த்தக அமர்வுகளில் (மார்ச் 29-ஏப்ரல் 6) ரூ. 10,43,216.79 கோடியாக உயர்ந்து தற்போது ரூ. 2,62,37,776.13 கோடியாக உள்ளது.

கடந்த ஐந்து வர்த்தக அமர்வுகளில் BSE சென்செக்ஸ் 30 பங்குகளின் அளவு 2,219.25 புள்ளிகள் (3.85 சதவீதம்) உயர்ந்துள்ளது. மேலும் கடந்த வாரம், "ராம நவமி"க்காக வியாழன் அன்று பங்குச் சந்தைகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த வாரம் "மஹாவீர் ஜெயந்தி"க்காக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) பங்குச் சந்தைகள் மூடப்பட்டன. வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) "குட் ஃப்ரைடே" காரணமாக சந்தைகள் மூடப்பட்டன.

வியாழன் அன்று, BSE சென்செக்ஸ் 143.66 புள்ளிகள் (0.24 சதவீதம்) உயர்ந்து 59,832.97 புள்ளிகளுடன் வர்த்தகத்தை முடிவு செய்தது. ரிசர்வ் வங்கி யாரும் எதிர்பாரத விதமாக பெஞ்ச்மார்க் விகிதங்களை மாற்றமால் இருந்ததும் சந்தை உயர்விற்கு காரணமாக அனைந்தது.

மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான முதலீடும், இந்தியாவின் பொருளாதரம் சற்று முன்னேறிய நிலையிலும் பங்குச் சந்தை பாசிட்டிவ்வாக செயல்படத் தொடங்கியுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்