ஆப்நகரம்

52 வார குறைந்த விலையை எட்டிய டாடா பங்கு... 2 மாதத்தில் 26% சரிவு!! வாங்கலாமா? வேண்டாமா?

கடந்த இரண்டு மாதங்களில் இந்த டாடா குழும பங்கு விலை ரூ.1357.90 லிருந்து ரூ.1010 வரை சரிந்துள்ளது.

Samayam Tamil 10 Jun 2022, 3:10 pm
இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல் பங்கு விலை சரிந்தது. நிஃப்டியில் அதன் 52 வாரக் குறைந்த அளவு ரூ.991.80க்கு அருகில் உள்ளது. டாடா ஸ்டீல் பங்கின் விலை இன்று ஒரு பங்கிற்கு ரூ.15 என்ற வீழ்ச்சியுடன் துவங்கியது மற்றும் அதன் 52 வாரக் குறைவான மதிப்பிலிருந்து ரூ.20 அருகில் உள்ளது. இன்ட்ராடே குறைந்தபட்சமாக ரூ.1010.65க்கு சென்றது. கடந்த இரண்டு மாதங்களில், டாடா ஸ்டீல் பங்கின் விலை ரூ.1357.90 இலிருந்து ரூ.1010 வரை சரிந்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் 26 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
Samayam Tamil Tata Steel TV-tata-steel-distribution-halmstad-8928_39L


பங்குச் சந்தை நிபுணர்களின் கூற்றுப்படி, கடந்த சில மாதங்களில் உலோக விலைகள் 25 சதவிகிதம் அளவுக்கு சரிந்துள்ளன. மேலும் இது தற்போதைய நிலையிலிருந்து மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டீல் ஏற்றுமதிக்கு இந்திய அரசு கலால் வரி விதித்த பிறகு, கடந்த சில ஆண்டுகளாக தங்களுக்கு கிடைத்துவந்த வெளிநாட்டு வர்த்தகம் பெரிய அளவில் இனி கிடைக்கப் போவதில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர, பருவமழை விரைவில் நெருங்கி வருவதால் ஸ்டீல் பொருட்களின் தேவை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, டாடா ஸ்டீல் 2022 நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் வரவிருக்கும் 2023ம் ஆண்டின் முதல் காலாண்டு வருவாயைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 2-3 மாதங்களில் பங்குகளில் மேலும் பலவீனம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஸ்டீல் பங்குகளுக்கு 'செல் ஆன் ரைஸ்' டேக்குடன் ரூ.990 அளவில் வலுவான ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே, தற்போதைய பங்குச் சந்தையில் கிடைக்கும் சிறந்த பங்குகளில் இதுவும் ஒன்றாகும்.

மொத்தத்தில், மத்திய அரசின் ஸ்டீல் இறக்குமதிக்கு கலால் வரி விதிக்கப்பட்ட பிறகு, டாடா ஸ்டீல் பெரிய அளவிலான ஏற்றுமதி வர்த்தகத்தை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்