ஆப்நகரம்

முதலீட்டாளர்களுக்கு எட்டாக் கனியான லாபம்.. சரிவில் முடிந்த பங்குச் சந்தை!

கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து 3 நாட்கள் லாபத்தை பதிவு செய்த பிறகு இன்று அதிக விற்பனை அழுத்தத்தை தொடர்ந்து இன்று சரிவுடன் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளது.

Authored byநா. லோகநாயகி | Samayam Tamil 26 Mar 2024, 5:08 pm
கடந்த வாரம் பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. ஆனால் இன்று சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளது. நாளின் முடிவில் சென்செக்ஸ் 361.64 புள்ளிகள் சரிந்து 72,470.30 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே நேரத்தில் நிஃப்டி 92 புள்ளிகள் சரிந்து 22,004 புள்ளிகளில் நிறைவடைந்தது.
Samayam Tamil Stock market fall


பங்குச் சந்தை தரவுகளின்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) வெள்ளியன்று ரூ.3,309.76 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு நேரம் குறித்த நிச்சயமற்ற தன்மை சந்தை உணர்வைப் பாதிக்கிறது. கூடுதலாக, இந்த வாரத்தில் மூன்று வர்த்தக நாட்கள் மட்டுமே இருப்பதால், வர்த்தக அளவு குறைவாக உள்ளது, இந்த வாரம் சந்தை பெரிய ஏற்றம் இல்லாமல் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Colgate Palmolive (India), DMart, IndiGo, Pidilite Industries , Siemens மற்றும் Zomato உட்பட சுமார் 145 பங்குகள் BSE இன் இன்ட்ராடே வர்த்தகத்தில் புதிய 52 வார உயர்வை எட்டின. மறுபுறம், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏஏவாஸ் பைனான்சியர்ஸ், அல்கைல் அமீன்ஸ் கெமிக்கல்ஸ், டெல்டா கார்ப் , ஜிஎம்எம் பிஃபாட்லர் மற்றும் ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் உட்பட சுமார் 102 பங்குகள் , பிஎஸ்இ இன்ட்ராடே வர்த்தகத்தில் புதிய 52 வாரக் குறைவைத் தொட்டன.


பஜாஜ் ஃபைனான்ஸ் (2.43 சதவீதம் வரை), ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் (2.22 சதவீதம் வரை) மற்றும் அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (1.83 சதவீதம் வரை) பங்குகள் நிஃப்டி 50 குறியீட்டில் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

மேலும் பார்தி ஏர்டெல் (1.97 சதவீதம் சரிவு), பவர் கிரிட் (1.90 சதவீதம் சரிவு) மற்றும் ஐச்சர் மோட்டார்ஸ் (1.74 சதவீதம் சரிவு) பங்குகள் நிஃப்டி 50 குறியீட்டில் அதிக நஷ்டம் அடைந்துள்ளன.
எழுத்தாளர் பற்றி
நா. லோகநாயகி
நான் லோகநாயகி. நான் முதுகலை வணிக மேலாண்மை மற்றும் எம்.ஏ. பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு பட்டப்படிப்பும் முடித்துள்ளேன். எனக்கு பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். தற்பொழுது வர்த்தகம், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கிரிப்டோ கரன்சி, பொருளாதாரம், அரசு கொள்கைகள், வருமான வரி, உலக வணிகங்கள் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். தற்போது சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்