ஆப்நகரம்

Multibagger stock: ஏற்கெனவே பல மடங்கு லாபம்.. இப்போ போனஸ் பங்கும் வருது.. இதுதான் ரியல் ஜாக்பாட்!

Growington Ventures share: சுமார் 460% லாபம் கொடுத்தது மட்டுமல்லாமல் போனஸ் பங்குகளையும் அறிவித்துள்ளது குரோயிங்டன் வென்ச்சர்ஸ் நிறுவனம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 19 Feb 2023, 5:32 pm
கடந்த சில ஆண்டுகளாகவே சில மல்டிபேகர் பங்குகள் (Multibagger stocks) அட்டகாசமாக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளன. அவ்வகையில், பல மடங்கு லாபம் கொடுத்தது மட்டுமல்லாமல், போனஸ் பங்குகளையும் அறிவித்துள்ள ஒரு அட்டகாசமான பங்கை பற்றி பார்க்கலாம்.
Samayam Tamil multibagger
Multibagger - Growington Ventures stock


குரோயிங்டன் வென்ச்சர்ஸ் இந்தியா (Growington Ventures India Ltd) ஒரு டிராவல் ஏஜென்சி நிறுவனம். குரோயிங்டன் வென்ச்சர்ஸ் பங்கு விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் 436% உயர்ந்து பங்குதாரர்களுக்கு அசாத்தியமான லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.

இதுமடுமல்லாமல், குரோயிங்டன் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்குவதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது. பங்குதாரர்களுக்கு 24:100 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒவ்வொரு 100 குரோயிங்டன் வென்ச்சர்ஸ் பங்குகளுக்கும் கூடுதலாக 24 போனஸ் பங்குகள் வழங்குவதற்கு குரோயிங்டன் வென்ச்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 17ஆம் தேதி இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு நடைபெற்றது. அப்போது போனஸ் பங்குகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

குரோயிங்டன் வென்ச்சர்ஸ் பங்கு விலை தற்போது 75.05 ரூபாயாக உள்ளது. கடந்த 5 நாட்களிலேயே இந்த பங்கு 17.27% உயர்ந்து பங்குதாரர்களை அதிரச் செய்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இந்த பங்கு 17% உயர்ந்துள்ளது.

குரோயிங்டன் வென்ச்சர்ஸ் பங்கு கடந்த ஆறு மாதங்களில் 31% மேல் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலத்தில் மட்டும் இந்த பங்கு 459% உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 436% உயர்ந்துள்ளது.

பங்கு விலை இவ்வளவு உயர்ந்துள்ள சூழலில், தற்போது போனஸ் பங்குகளும் வழங்கப்படுவதால் குரோயிங்டன் வென்ச்சர்ஸ் பங்குதாரர்களுக்கு டபுள் ஜாக்பாட் என்றுதான் கூற வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்