ஆப்நகரம்

வெறும் 1 லட்சம் ரூபாய்க்கு சூப்பர் கார் வாங்கியிருக்கலாம்.. எப்படி தெரியுமா?

மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த பங்கில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது சொந்த கார் வாங்கி இருக்கலாம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 23 May 2023, 3:49 pm
ஐடி சேவை நிறுவனமான எக்ஸ்பிளியோ சொல்யூஷன்ஸ் (Expleo Solutions) பங்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 850 சதவீத லாபத்தை தனது பங்குதாரர்களுக்கு அள்ளி கொடுத்துள்ளது.
Samayam Tamil car
car


2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பின்போது பங்கு சந்தைகள் கடுமையாக சரிந்தன. அந்தாண்டு மே 22ஆம் தேதி எக்ஸ்பிளியோ பங்கு விலை 159 ரூபாயாக மட்டுமே இருந்தது. அப்போதே இந்த பங்கில் முதலீடு செய்தவர்களுக்கு இப்போது பல பல மடங்கு லாபம் கிடைத்திருக்கும்.

ஏனெனில், இன்று பங்கு வர்த்தகத்தின்போது எக்ஸ்பிளியோ பங்கு விலை 1501 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. ஆக கடந்த மூன்று ஆண்டுகளில் எக்ஸ்பிளியோ பங்கு விலை சுமார் 850 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு 8 மடங்குக்கு மேல் லாபம் கொடுத்துள்ளது.

உதாரணமாக 2020 மே மாதம் எக்ஸ்பிளியோ பங்கில் வெறும் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 94,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருக்கும். 2020 மே மாதத்தில் எக்ஸ்பிளியோ பங்கில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 9.44 லட்சம் ரூபாயாக மாறி இருக்கும்.

சொந்தமாக கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த பங்கில் ஒரு லட்சம் ரூபாயை போட்டுவிட்டு பொறுமையாக காத்திருந்தால் இப்போது சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு நல்ல காரை சொந்தமாக வாங்கி இருக்கலாம்.

வெறும் மூன்று ஆண்டுகளில் இப்படி அட்டகாசமான லாபத்தை தனது பங்குதாரர்களுக்கு அள்ளி வழங்கியுள்ளது எக்ஸ்பிளியோ சொல்யூஷன்ஸ் பங்கு. இந்நிறுவனம் அடிப்படையில் ஒரு ஐடி சேவை நிறுவனமாகும். இதுபோக கன்சல்டிங் சேவைகள், டெக்னாலஜி மற்றும் எஞ்சினியரிங் சேவைகளிலும் ஈடுபட்டுள்ளது.

பங்கு விலை உயர்வது மட்டுமல்லாமல் எக்ஸ்பிளியோ நிறுவனத்தின் வருமானமும் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் எக்ஸ்பிளியோ நிறுவனத்தின் லாபம் 154 சதவீதம் அதிகரித்து 28.94 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு மார்ச் காலாண்டில் லாபம் 11.38 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல விற்பனையும் 27.66 சதவீதம் அதிகரித்து 135.12 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்