ஆப்நகரம்

வீட்டு வசதி வாரியத்தில் ரூ. 500 கோடி மோசடி

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் போலி ஆவனங்களை தயாரித்து 500 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

TNN 14 Oct 2017, 9:50 am
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் போலி ஆவனங்களை தயாரித்து 500 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Samayam Tamil tamilnadu housing board corporation cheated 500 crore
வீட்டு வசதி வாரியத்தில் ரூ. 500 கோடி மோசடி


அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், அவர்களுடைய பொருளாதார வசதிக்களுக்குள் வீடுகள், மனைகள் பெறுவதற்காக வீட்டு வசதி வாரியம் அமைக்கப்பட்டது.

இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு கோட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அவற்றை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டன.

இவற்றில் சில நிலங்கள் எதிர்கால தேவை கருதி, பயன்படுத்தாமல் வைக்கப்பட்டன. இந்த நிலங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போலியாக ஆவணங்கள் தயாரித்து, விற்று மோசடி செய்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டாலும், அதிகாரிகள் அவற்றிற்குரிய கோப்புகள் ஆதாரங்களை தொலைத்து விட்டதால், சரியான நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்