ஆப்நகரம்

காங்., தேர்தல் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தமிழகம் வருகை

காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முகுல் வாஸ்னிக் நாளை தமிழகம் வருகிறார்.

TNN 12 Apr 2016, 9:58 pm
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முகுல் வாஸ்னிக் நாளை தமிழகம் வருகிறார்.
Samayam Tamil congress leader mukul wasnik coming to tamil nadu
காங்., தேர்தல் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தமிழகம் வருகை


சென்னை வரும் அவர், திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்துப் பேச உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு, திமுக கூட்டணி 41 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டு, வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரசில் இருந்து வெளியேறிய பீட்டர் அல்ஃபோன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கும் தொகுதி ஒதுக்க, காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

எனவே, அவர்களுக்கான தொகுதியில் இடம்மாற்றம் செய்ய கோரி, முகுல் வாஸ்னிக், கருணாநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்துவார், என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி