ஆப்நகரம்

மத்திய அமைச்சகத்தின் விவசாய துறையில் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ‘மேனேஜ்’ விவசாய கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டயப்படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Samayam Tamil 30 Aug 2019, 6:10 pm
மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எக்ஸ்டென்சன் மேனேஜ்மென்ட் என்ற கல்வி நிறுவனம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது அக்ரி மேனேஜ்மென்ட் துறையில் முதுநிலை பட்டயப்படிப்புக்கு அட்மிஷன் நடைபெறுகிறது.
Samayam Tamil manage admission


இதன் படிப்புக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். அதாவது 2019 முதல் 2021 வரையில் இந்த படிப்பு பயிற்றுவிக்கப்படும். இதில் சேருவதற்கு 50% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். எஸ்சி, எஸ்டி மாணவர்களாக இருந்தால் 45% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. இந்தாண்டு கேட் தேர்வு எழுதியிருந்தால், அந்த மதிப்பெண்ணும் சேர்த்துக் கொள்ளப்படும்.

இந்த படிப்பில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http:// manage.gov.in என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து டிசம்பர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு மேனேஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:

https://www.manage.gov.in/pgdmabm/prospectus.pdf

அடுத்த செய்தி