ஆப்நகரம்

தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு!

2023 - 2024ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 31 May 2023, 4:12 pm
தமிழ்நாட்டில் 2022 - 2023ம் கல்வியாண்டு முடிவுபெற்று அடுத்த 2023 - 2024 கல்வியாண்டிற்கான அட்மிஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டப் பல்கலைக்கழகம் என தனித்தனியாக அட்மிஷன் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil TNDALU Admission 2023


இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டக்கல்லூரிகளில் 2023 - 2024ம் கல்வியாண்டில் அட்மிஷன் பெறுவதற்கான விண்ணப்பதிவு நடைப்பெற்று வந்தது. தற்போது மேலும் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு,

TNDALU அறிவிப்பு!
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் பயிற்றுவிக்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tndalu.ac.in வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.06.2023 மாலை 05.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சட்டபடிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 10.6.2023ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி