ஆப்நகரம்

TNFUSRC Forest Watcher: உங்களுக்காக காத்திருக்கும் தமிழ்நாடு வன சீருடையில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வனத் துறையில் 564 காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 7 Mar 2019, 10:48 pm
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வனத் துறையில் 564 காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது.
Samayam Tamil tamilnadu.


தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC), வனத்துறையில் காலியாக உள்ள 564 காவலர் பதவிகளுக்கான நேரடி நியமனம், இணையவழித் தேர்வு மூலமாக நடத்தப்படும். வரும் மே மாதம் முதல் வாரம் முதல் கடைசி வாரம் வரையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு forests.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று பார்க்கலாம்.

கல்வித்தகுதி:

கண்டிப்பாக 10ம் வகுப்பு தேர்வில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான உயர்நிலை படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பொது: 21 வயது முதல் 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

எஸ்சி/எஸ்டி: 21 வயது முதல் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:

விண்ணப்பத்தார்களுக்கு தேர்வுக்கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு, சர்வீஸ் கட்டணமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, பொறுமை சோதனை தேர்வு ஆகியவை நடத்தப்படு. இறுதியில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி