ஆப்நகரம்

ஆண்டுத்தேர்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

TN Annual Exam 2020: தமிழகத்தில் 6,7,8,9 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டுத்தேர்வு, மூன்றாம் பருவத்தேர்வு எப்போது நடைபெறும் என்பது பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள் தேர்வு காலஅட்டவணைக்கு ஏற்றவாறு தயாராகிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Samayam Tamil 11 Mar 2020, 11:30 am
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கி விட்ட நிலையில், இதர வகுப்புகளுக்கான ஆண்டுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது பற்றிய விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil TN Annual Exam 2020


தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கி விட்டது. பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 17 ஆம் தேதி தொடங்குகிறது. இதர 6,7,8 வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்தேர்வும், 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வும் நடத்தப்பட உள்ளது.

Also Read This:
இந்த நிலையில், சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் இதர வகுப்புகளுக்கான தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன்படி, சென்னையில் 6,7,8 ஆம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வுகள் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 17 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதில் 6 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7 ஆம் வகுப்புக்கு மதிய வேளையிலும் தேர்வுகள் நடைபெறும்.

இதே போல், 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வுகள் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வுகள் மதிய வேளையில் நடைபெறும். மேற்கண்ட அட்டவணையின்படி, தேர்வுகள் குறித்த நாளில் நடைபெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி