ஆப்நகரம்

10th Public Exam நடைபெறுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

Samayam Tamil 8 Apr 2020, 4:58 pm
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. ஏப்ரல் 8 ஆம் தேதி நிலவரப்படி, இதுவரையில் தமிழகத்தில் 690 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் உடல்நலம் திரும்பியுள்ளனர். ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
Samayam Tamil Minister Sengottaiyan


Also Read This:
தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி

இதனிடையே ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் தீவிரமடையும் இந்த சூழலில் திட்டமிட்டபடி10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. மேலும், நடப்பு ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யும்படி அரசியல் கட்சியினரும், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில், அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து முதல்வர் பழனிசாமி தான் முடிவு செய்வார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி