ஆப்நகரம்

JEE Main 2023 : ஜேஇஇ மெயின் அட்மிட் கார்டு தேதியை வெளியிட்ட யூட்யூப்?! பொய் செய்தி என்று அறிக்கை விட்ட NTA!

JEE தேர்வு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வரும் எந்த விதமான போலி செய்திகளையும் நம்பி ஏமாற வேண்டாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 30 Mar 2023, 12:18 pm
பல்கலைக்கழக மானியக்குழுவின்(UGC) சார்பாக பல்வேறு தேசிய நுழைவுத்தேர்வுகளை நடத்தி வருகிறது தேசிய தேர்வு முகமை (NTA). அதில் குறிப்பாக பொறியியல் சார்ந்த படிப்புகளுக்காக நடத்தப்படும் JEE (Joint Entrance Exam) தேர்வும் தேசிய தேர்வு முகாமையால் நடத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil JEE MAIN 2023


JEE குறித்த பொய் செய்தி!
இந்நிலையில் சமீபத்தில் JEE அட்மிட் கார்ட் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் யூட்யூப் சேனல்களில் தவறான தகவல் பரப்ப பட்டதாக தேசிய தேர்வு முகமையின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை.

NTA அறிவிப்பு!
அந்த அறிவிப்பில் JEE தேர்வு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், JEE தேர்வு குறித்த அனைத்து விதமான அறிவிப்புகளும் https://jeemain.nta.nic.in/ மற்றும் https://nta.ac.in/. ஆகிய அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டுமே வெளியிடப்படும் என்று கூறியுள்ளது.

ஏதாவது தகவல் தேவை என்றால் 011-40759000 என்ற எண்ணுக்கோ அல்லது jeemain@nta.ac.in. என்ற ஈமெயில் முகவரிக்கோ தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி