ஆப்நகரம்

தமிழகத்திலும் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தைப் போல், தமிழகத்திலும் 8 ஆம் வகுப்பு வரையில் தேர்வுகள் இல்லாமலே ஆல் பாஸ் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Mar 2020, 2:57 pm
கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள், மாணவர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil TN School Exams 2020


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவுதலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக, பள்ளிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் மட்டும் நடந்து வருகிறது. இதனிடையே உத்தரப்பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு வரையில் தேர்வுகள் இல்லாமலே, ஆல் பாஸ் செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Also Read This:

இந்த நிலையில், உத்தரப்பிரதசே மாநிலத்தைப் போல், தமிழகத்திலும், 8 ஆம் வகுப்பு வரையில் தேர்வுகள் நடத்தாமல், ஆல் பாஸ் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்தாண்டு புதிய பாடத்திட்டம் என்பதால், மாணவர்கள் அதனை கண்டிப்பாக படிக்க வேண்டியதாக உள்ளது. தேர்வுகள் நடக்காவிட்டாலும், பாடங்கள் முழுமையாக கற்பிக்கப்பட வேண்டும். அப்போது தான் அடுத்த கல்வியாண்டில், அடுத்த வகுப்புக்கு செல்லும் போது, மாணவர்கள் அந்த பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரையில் வாட்ஸ்அப் குரூப் மூலம் டியூசன் எடுக்கப்பட்டு வருகிறது. முக்கிய பாடங்கள், முக்கிய வினாக்கள் அனைத்தும் வாட்ஸ்அப்பில் ஷேர் செய்து வருகின்றனர். மேலும், மாணவர்களின் சந்தேகங்களை வாட்ஸ்அப் மூலமாகவே ஆசிரியர்கள் விளக்கமளித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி