ஆப்நகரம்

மறுபடியும் மொதல்ல இருந்தா..! ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு!!

ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றவர்களுக்கு, மீண்டுமொரு தேர்வு எழுத வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Samayam Tamil 21 Sep 2019, 1:12 pm
2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மீண்டும் ஒரு சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் தான் அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றும் சூழல் உள்ளது. இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைகள் இல்லை. அதற்கு பின்பு நடத்தப்பட்டு வரும் தேர்வுகளில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

(நீட் தேர்வில் மேலும் சில மாணவர்கள் ஆள்மாறாட்டமா? அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் சோதனை)

இந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, பணிக்காக காத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் வரப்பாளையத்தில் அத்திக்கட்வு அவிநாசி திட்டத்தின் 5வது நீரேற்று நிலையத்தின் தொடக்க விழா நேற்று (வெள்ளி) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் திட்டத்தை தொடக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, ’2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மீண்டும் ஒரு சிறப்பு தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு மிகவிரைவில் பணி நியமனம் வழங்கப்படும்.

(5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு.. ஆனால்..)

பள்ளி மாணவர்களுக்கு சில தனியார் தன்னார் நிறுவனங்கள் பயிற்சி அளிக்கின்றனர். இசை, விளையாட்டு போன்ற வகுப்புகள் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மாறாக வகுப்பில் பாடம் எடுப்பதற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அனுமதி இல்லை’ இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி