ஆப்நகரம்

Tamil Nadu 10th Public Exam 2023 Hall ticket : இன்று முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு!

TN SSLC Hall ticket 2023: ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டினை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 27 Mar 2023, 12:13 pm
2022-2023 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் துவங்க உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தேர்வெழுத தேவையான தேர்வு மைய நுழைவுசீட்டினை இன்று முதல் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Samayam Tamil 10th Public Exam

10th Public Exam 2023: அறிவியல் தேர்வில் யாரா இருந்தாலும் 70 மார்க் வாங்கலாம்! சென்டம் வாங்க ஈசி டிப்ஸ்!
இன்று முதல் பள்ளிகள் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
10th Public Exam : சமூக அறிவியல் தேர்வில் 100 மதிப்பெண் வாங்க வேண்டுமா? வினாவாரியாக எக்ஸாம் டிப்ஸ்!
மேலும், பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் பள்ளி மாணவ / மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் ஏதுமிருப்பின், சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்பட்டியலில் உரிய திருத்தங்கள் தலைமையாசிரியர் மேற்கொள்ளும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர்களிடம் அறிவுறுத்துமாறும் வழிகாட்டல் தரப்பட்டுள்ளது.
10th Public Exam: ஆங்கில தேர்வில் 100 மதிப்பெண் வாங்குவது எப்படி? 35 எடுத்து பாஸ் ஆகவும் ஐடியா இருக்கு!
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. முழு அட்டவணையை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி