ஆப்நகரம்

தொல்லியல் துறை பணிக்கான TNPSC தேர்வு மையம் மாற்றம்!

TNPSC Archaeological Officer 2020: தொல்லியல் அலுவலர் பதவிக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Feb 2020, 8:00 pm
தொல்லியல் துறையில் தொல்லியல் அலுவலர் பதவிக்கான டி.என்.பி.எஸ்.சி (TNPSC) தேர்வு வரும் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இப்பணிக்கான தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil TNPSC Exam Center


Tamil Nadu Public Service Commission TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 28.11.2019 அன்று தேர்வாணைய அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி, தொல்லியல் துறையில் காலியாக உள்ள தொல்லியல் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் அறிவிக்கப்பட்டது.

மதுரை அரசு கருவூல அலுவலகத்தில் ரூ.16 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

தொல்லியல் அலுவலர் பணிக்கான இந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக இத்தேர்வு எழுதுவதற்கு சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே அடுத்தடுத்து வெளிவந்த டி.என்.பி.எஸ்.சி முறைகேடு காரணமாக, தற்போது தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தொல்லியல் அலுவலர் பதவிக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை நீங்கலாக மற்ற தேர்வு மையங்களை தெரிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு, இந்த தகவல் எஸ்எம்எஸ், இமெயில் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் வட்டார கல்வி அலுவலர் பதவிக்கான டி.ஆர்.பி தேர்வு மையமும் மாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் மட்டும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
TNPSC Archaelogy Officer Exam Center Changed Notification

அடுத்த செய்தி