ஆப்நகரம்

IMU CET 2019: கடல்சார் படிப்புக்கான நுழைவுத்தேர்வு: ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

தேசிய கடல்சார் பல்கலைக்கழக படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு வரும் ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம் என கடல்சார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 26 Mar 2019, 12:35 pm
தேசிய கடல்சார் பல்கலைக்கழக படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு வரும் ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம் என கடல்சார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil IMU CET 2019: கடல்சார் படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு: ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!
IMU CET 2019: கடல்சார் படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு: ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!


சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்திலும், மும்பை, விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள அதன் வளாகங்களிலும் பிஎஸ்சி (நாட்டிக்கல் சயின்ஸ்), டிப்ளமோ நாட்டிக்கல் சயின்ஸ், பிஎஸ்சி (கப்பல் கட்டுதல்), பி.டெக். (மரைன் என்ஜினியரிங்) எம்.டெக். எம்பிஏ (துறைமுகம் மற்றும் கப்பல் மேலாண்மை) உள்பட பல்வேறு கடல்சார் தொழில்நுட்ப படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இவற்றில் சேருவதற்கான IMU CET எனப்படும், தேசிய நுழைவுத் தேர்வு, வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்க உள்ளதாக கடல்சார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் www.imu.edu.in என்ற, இணையதள முகவரி மூலம் ஏப்ரல் 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். டிப்ளமா மற்றும் பட்டப் படிப்புகளுக்கு பிளஸ் டூ மாணவர்களும், முதுநிலை படிப்புகளுக்கு பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி