ஆப்நகரம்

வேளாண் படிப்பில் சேர ICAR AIEEA ஆன்லைன் கலந்தாய்வு தொடக்கம்

முதல் கட்டக் கலந்தாய்வில கல்லூரிகள் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளுக்குச் சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து கட்டணத்தையும் செலுத்தி சேர்ந்துகொள்ள வேண்டும்.

Samayam Tamil 29 Jul 2019, 11:50 am
ஏஐஇஇஏ தேர்வு மூலம் வேளாண் துறை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.
Samayam Tamil dfddf


வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சில் (Indian Council of Agricultural Research) மற்றும் தேசிய தேர்வுகள் ஏஜென்சி ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் 75 வேளாண் மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை நடத்துகின்றன.

இளநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA UG, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA PG தேர்வுகளை நடத்துகிறது. இத்துடன் ஆய்வு மாணவர்களுக்காக AICE- JRF/SRF தேர்வையும் நடத்திவருகிறது.

இந்த ஆண்டும் இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வு முடிவுகள் அடிப்படையில் மூன்று கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. முதல் கட்ட கலந்தாய்வு இன்று ஆரம்பித்துள்ளது. ஜூலை 30ஆம் தேதி (நாளை) இரவு 11.59 மணிக்குள் மாணவர்கள் தங்கள் விருப்பமான கல்லூரியை ஆன்லைனில் தெரிவு செய்ய வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் தங்கள் தெரிவை மாற்றிக்கொள்ளலாம். ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகள் பற்றிய முடிவு வெளியாகும்.

முதல் கட்டக் கலந்தாய்வில கல்லூரிகள் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளுக்குச் சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து கட்டணத்தையும் செலுத்தி சேர்ந்துகொள்ள வேண்டும்.

இதேபோல இரண்டாவது கலந்தாய்வின் முடிவுகள் ஆகஸ்ட் 8ஆம் தேதியும் மூன்றாம் கலந்தாய்வு முடிவுகள் 17ஆம் தேதியும் வெளியிடப்படும்.

இந்த ஆண்டுகான NTA ICAR AIEEA 2019 தேர்வு ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 87 நகரங்களில் நடைபெற்றது. கணினி வழியில் நடக்கும் இத்தேர்வு காலைs 9.30 மணிக்கு தொடங்கி பகல் 12 மணி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை 18ஆம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்பட்டன.

அடுத்த செய்தி