ஆப்நகரம்

ஜே.இ.இ மெயின் தேர்வு அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!

JEE Mains Admit Card 2020: Joint Entrance Examination ஜே.இ.இ மெயின் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.

Samayam Tamil 6 Dec 2019, 2:31 pm
வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள ஜே.இ.இ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (Admit Card) இன்று வெளியிடப்படுகிறது. மாணவர்கள் இதனை jeemain.nta.nic.in என்ற ஜே.இ.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
Samayam Tamil JEE 2020


இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) உள்ளிட்டதேசிய அளவில் தரம் வாய்ந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு ஜே.இ.இ எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், தர வரிசை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இந்த நிலையில், வரும் 2020 கல்வியாண்டுக்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வு அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, JEE Main 2020 தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு (Admit Card) இன்று டிசம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களுடைய ஹால் டிக்கெட்டை ஜேஇஇ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.nic.in என்ற பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

ஜனவரி 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் JEE Main 2020 தேர்வு நடைபெற உள்ளது. ஹால்டிக்கெட் இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு நடைபெறும் இடம், தேர்வு நேரம் உள்ளிட்ட விபரங்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். மாணவர்கள் தங்களுடைய பெயர், தேர்வு எண், புகைப்படம், தேர்வு மையம் ஆகியன ஹால்டிக்கெட்டில் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

அடுத்த செய்தி