ஆப்நகரம்

வேளாண் படிப்பில் சேருவதற்கான ICAR நுழைவுத்தேர்வு அறிவிப்பு!

ICAR AIEEA 2020: வேளாண் படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ICAR Entrance Exam 2020 அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் ICAR தேர்வு எழுதுவதன் மூலம், உயர்தர கல்வி நிறுவனங்களில் சேரலாம்.

Samayam Tamil 3 Mar 2020, 1:13 pm
அகில இந்திய அங்கீகாரம் பெற்ற, உயர் கல்வி நிறுவனங்களில் வேளாண்மை படிப்பில் சேருவதற்கான ICAR நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
Samayam Tamil ICAR 2020


Indian Council of Agricultural Research (ICAR) எனப்படும் வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், 2020-21 கல்வியாண்டிற்கான ICAR Exam 2020 அறிவித்துள்ளது. வேளாண்மையில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்பில் சேருவதற்கு தனித்தனியாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ICAR நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு மார்ச் 1 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.


ICAR யார் யார் விண்ணப்பிக்கலாம்?
ICAR UG 2020 தேர்வுக்கு பிளஸ் டூ படித்து முடிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 16 வயது நிரம்பியிருக்க வேண்டும். இத்தேர்வுக்கான விண்ணப்பக்கட்டணம் 750 ரூபாய் ஆகும். SC / ST / PwD / மாற்றுப்பாலினத்தவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் 375 ரூபாய் ஆகும்.

முக்கிய நாட்கள்:
விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்: 1 மார்ச் 2020
விண்ணப்பப்பதிவு முடியும் நாள்: 31 மார்ச் 2020
விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய: 25 ஏப்ரல் முதல் 2 மே 2020 வரை
ஹால்டிக்கெட் கிடைக்கும் நாள்: 8 மே 2020
தேர்வு நடைபெறும் நாள்: 1 ஜூன் 2020
தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: 15 ஜூன் 2020

இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக கவுன்சில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.

அடுத்த செய்தி