ஆப்நகரம்

CUCET 2019: மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு நுழைவு தேர்வு அறிவிப்பு!

மத்திய பல்கலைக்கழகங்களில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவு தேர்வு எழுதுவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Mar 2019, 11:15 am
மத்திய பல்கலைக்கழகங்களில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவு தேர்வு எழுதுவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil சென்னை உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு நுழைவு தேர்வு அறிவிப்பு!


தமிழகம் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 11 மாநிலங்களில் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படுகிறது. இங்கு நல்ல தரமான கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்கால மேற்படிப்புகள் தொடருவதற்கு மத்திய பல்கலைக்கழகங்களில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பல்கலைக்கழகங்கில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 25 மற்றுமு் 26ம் தேதி நடக்கிறது. இந்த நுழைவுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். நுழைவுத் தேர்வை பெங்களூருவில் உள்ள அம்பேத்கர் பொருளியியல் கல்லூரி ஒருங்கிணைந்து நடத்துகிறது. இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு மத்திய பல்கலைக்கழ பொது நுழைவுத்தேர்வு அறிவிப்பை https://cucetexam.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

கூடுதல் விபரங்கள்:
தேர்வு மையங்கள்: https://cucetexam.in/Document/TestCities.pdf
மாணவர் சேர்க்கை அறிவிப்பு: https://cucetexam.in/Document/Advertisement_English_Hindi.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://cucetexam.in/CUCET2019/View/Login03.aspx
எப்படி விண்ணப்பம் பதிவு செய்வது: https://cucetexam.in/Document/How_to_Apply.pdf
பொது வழிகாட்டி: https://cucetexam.in/Document/General_Instruction_2019.pdf

அடுத்த செய்தி