ஆப்நகரம்

2020 நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது!

2020 ஆம் ஆண்டு நீட் இளநிலை முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்படுகிறது.

Samayam Tamil 16 Oct 2020, 3:46 pm
இந்தியாவில் தேசிய தகுதி நுழைவு தேர்வான நீட் தேர்வுக்கான முடிவுகளை நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி (என்.டி.எ) இன்று அறிவிக்கிறது. நீட் என்பது இந்தியாவில் மருத்துவம் பயில்வதற்காக பொதுவாக நடத்தப்படும் தகுதி தேர்வு ஆகும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே மருத்துவம் சார்ந்த படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய படிப்புகளை படிக்க முடியும்.
Samayam Tamil 2020 neet exam results going to be released today
2020 நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது!


இந்த வருடம் (2020) நீட் தேர்விற்கு மொத்தம் 15.97 லட்சம் நபர்கள் பதிவு செய்திருந்தனர். அதில் 85.6 சதவீதத்தினர் எம்.பி.பி.எஸ்/ பி.டி.எஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்காக செப்டம்பர் 13 அன்று தேர்வு எழுத வந்திருந்தனர். அதில் 290 பேர் நோய் தொற்று காரணமாக தேர்வு எழுத முடியாமல் போனது.

இந்நிலையில் தற்சமயம் நீட் தேர்விற்கான முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொற்றுநோய் காரணமாக தேர்வு எழுத முடியாதவர்கள் அக்டோபர் 14 ஆம் தேதி நீட் தேர்வை எழுத உச்சநீதி மன்றம் அனுமதித்தது.

நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸியின் கோரிக்கைக்கு இணங்க உச்சநீதி மன்றம் இந்த அனுமதியை வழங்கியது. பதிவு செய்யப்பட்ட நபர்களில் மொத்தம் 85.6 சதவீதத்தை சேர்ந்தவர்கள் எம்.பி.பி.எஸ்/ பி.டி.எஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்காக நீட் தேர்வை எழுதியுள்ளனர்.

அவர்களது தேர்வு முடிவுகளை வெளியிடும் நேஷனல் டெஸ்டின் ஏஜென்ஸி தேர்வு முடிவுகள் குறித்து எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பையும் அறிவிக்கவில்லை என்றாலும் இன்று மாலை 4 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பேசப்படுகின்றன.

கொரோனா காரணமாக நீட் தேர்வானது இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் கடுமையான முன்னெச்சரிக்கையோடுதான் செப்டம்பர் 13 அன்று நடந்தது. இந்த ஆண்டு முதல் இந்தியாவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள், புதுச்சேரியில் உள்ள ஜவர்ஹலால் முதுகலை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிலும் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான சேர்க்கை நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி