ஆப்நகரம்

GATE 2019 Score Card: கேட் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு!

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐஐடி மெட்ராஸ் கேட் தோ்வுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று முதல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Mar 2019, 10:33 am
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐஐடி மெட்ராஸ் கேட் தோ்வுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று முதல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil chennai iit


இந்தியாவில் உள்ள ஐஐடி, என்ஐடி,அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் எம்.இ, எம்.டெக் படிக்க மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வு கேட் (GATE). இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பி.எச்.சி.எல். (BHEL), ஐ.ஓ.சி.எல். (IOCL), ஓ.என்.ஜி.சி. (ONGC) போன்ற நிறுவனங்களில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில், 2019ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வை ஐஐடி மெட்ராஸ் (IIT-Madras) நடத்தியது. பிப்ரவரி மாதம் 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில் கேட் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 24 இன்ஜினியரிங் பாடங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்த வருடம் புதிதாக புள்ளியல் (Statistics) தொடர்பான பாடங்கள் இணைக்கப்பட்டன. கேட் தோ்வுக்கான முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டு கேட் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. தோ்வா்கள் தங்கள் மதிப்பெண் பட்டியலை இன்று 20ம் தேதி முதல் மாா்ச் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியலை http://gate.iitm.ac.in என்ற ஐஐடியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை எண்டர் செய்ய வேண்டும். தரவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை எதிர்கால பயன்பாட்டுக்காக பிரிண்ட் அவுட் செய்து கொள்ளவும்

அடுத்த செய்தி