ஆப்நகரம்

IBPS RRB தேர்வு முடிவுகள் வெளியீடு!

கடந்தாண்டு நடைபெற்ற ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

Samayam Tamil 30 Aug 2019, 12:40 pm
கடந்தாண்டு நடைபெற்ற ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.
Samayam Tamil ibps


தி இன்ஸ்ட்டிட்டியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் லெசக்ஷன் எனப்படும் ஐபிபிஎஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஆள் சேர்ப்புக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில், கடந்த ஆண்டு ஆர்ஆர்பி ஆபீஸர் ஸ்கேல், ஆபீஸ் அசிஸ்டெண்ட் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது.

தமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச IAS/IPS பயிற்சி

ஆபீசர் ஸ்கேல் 1 பணிக்கான பிரிமிலினரி தேர்வுகள் கடந்தாண்டு ஆகஸ்ட் 11,12 ஆகிய தேதிகளிலும், ஆபீஸ் அசிஸ்டெண்ட் பணிக்கான பிரிமிலினரி தேர்வுகள் ஆகஸ்ட் 19, 25, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட்டது. மெயின் தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதியில் நடந்தது.

82 ஆயிரம் மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை
இந்நிலையில், ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நேரடியாக தேர்வு முடிவு பக்கத்தைப் பார்க்க கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்யவும்:
IBPS RRB VII Office Assistant Result 2018
IBPS RRB VII Officer Scale I Result 2018

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்