ஆப்நகரம்

Kaviya Varshini: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த கோவை மாணவி!

இன்று வெளியான சிபிஎஸ்இ தேர்வில் கோவையைச் சேர்ந்த மாணவி காவ்யா வர்ஷினி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

Samayam Tamil 6 May 2019, 5:44 pm
நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் வரை 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெற்றன. இதற்கான தேர்வு முடிவுகளை முன்னதாகவே வெளியிட திட்டமிடப்பட்டது. அதன்படி, மே 2ஆம் தேதி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
Samayam Tamil Kaviya


இதைத் தொடர்ந்து இன்று(மே 6) சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் கேரளாவைச் சேர்ந்த பாவனா என் சிவதாஸ் இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். அவர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

CBSE Board Results 2019: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

இதேபோல் தமிழக அளவில் கோவையைச் சேர்ந்த காவ்யா வர்ஷினி என்ற மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவருடன் 59 மாணவர்கள் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கோவையில் உள்ள வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளியில் வர்ஷினி படித்து வந்துள்ளார். மருத்துவர் ஆக வேண்டும் என்பதே இவரது ஆசை ஆகும். தனது சாதனை குறித்து வர்ஷினி கூறுகையில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் உறுதுணையால் தான், இவ்வளவு அதிக மதிப்பெண்களை பெற முடிந்தது.

தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று எனது பெற்றோர் ஒருபோதும் வற்புறுத்தியது இல்லை. அடிப்படை கருத்துகளை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்குவர். எனது பெற்றோர் அளித்த சுதந்திரத்தால் தான், எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்று கூறினார்.

இவர் தேசிய அளவில் 3ஆம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. காவ்யாவிற்கு பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி