ஆப்நகரம்

முதுநிலை மருத்துவப்படிப்புக்கான NEET தேர்வு ரேங்க் பட்டியல் வெளியீடு!

NEET PG Quota Rank List 2020: முதுநிலை நீட் தேர்வு NEET Rank List 2020 இடஒதுக்கீடு ரேங்க் பட்டியல் NBE இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Feb 2020, 8:19 pm
National Board of Examinations NBE எனப்படும் தேசிய தேர்வு வாரியம், முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு ரேங்க் பட்டியல் NEET PG Quota Rank List 2020 வெளியிட்டுள்ளது.
Samayam Tamil NEET PG 2020 Quota Rank List


மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்கான NEET PG 2020 தேர்வு கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த தேர்வின் முடிவுகள், www.nbe.edu.in இணையதளத்தில் ஜனவரி 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்வர்களின் மதிப்பெண் விவரங்களும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது NEET PG Quota Rank List 2020 எனப்படும் இடஒதுக்கீடு வாரியான ரேங்க் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த ரேங்க் பட்டியலை தேசிய தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nbe.edu.in பக்கத்தில் காணலாம்.

மொத்தம் 889 பக்கங்கள் அடங்கிய ரேங்க் பட்டியல், PDF பைலாக வெளியிடப்பட்டுள்ளது. NEET PG 2020 தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களுடைய தேர்வு எண்னை வைத்து, அதற்குரிய இடஒதுக்கீட்டை பார்க்கலாம்.

நேரடியாக NEET PG Merit List 2020 பார்ப்பதற்கு கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்யவும்.

அடுத்த செய்தி