ஆப்நகரம்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு!

TNPSC Group 1 Main Results: Tamil Nadu Public Service Commission டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது.

Samayam Tamil 10 Dec 2019, 9:08 am
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் (TNPSC Group 1 Main Results) வெளிவந்துள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.
Samayam Tamil TNPSC


Tamil Nadu Public Service Commission TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஜூலை மாதம் குரூப் 1 பணியிடங்களுக்கான முதன்மை தேர்வை நடத்தியது. இந்த தேர்வின் முடிவுகள் இன்று (நவ.9) வெளிவந்துள்ளது. குரூப் 1 தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய தேர்வு முடிவை, www.tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

வெற்றி பெற்றவர்களுக்கு வரும் டிசம்பர் 23 முதல் 31 ஆம் தேதி வரையில், அடுத்தக்கட்ட நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் அதற்கு ஏற்ப தயாராகும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக வனத்துறையில் வேலை.. எக்கச்சக்க காலியிடங்கள்..

குரூப் 1 தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்து கொள்வது?
படி 1: முதலில் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
படி 2: Latest Result என்ற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்
படி 3: இப்போது அதில் POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-I (GROUP-I SERVICES) என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
படி 4: அதன் அருகில் இருக்கும் தேர்வு முடிவுகள் லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 5: இப்போது தேர்வு முடிவுகள் அனைத்தும் பி.டி.எப் (PDF) பைலாக இருக்கும். குரூப் 1 முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுடை தேர்வு எண் அதில் கொடுக்கப்பட்டிருக்கும்
படி 6: விண்ணப்பதாரர்கள், Ctrl+F என்ற பொத்தானை அழுத்தி, தங்களுடைய தேர்வு எண்னை டைப் செய்து, தேர்வு முடிவினை தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு தொழில் வணிக ஆணையரக பணிக்கான TNPSC தேர்வு அறிவிப்பு!

நேரடியாக TNPSC Group 1 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.
TNPSC Group 1 Main Exam Result 2019

அடுத்த செய்தி