ஆப்நகரம்

இன்ஜினியரிங் சர்வீஸ் பணிக்கான UPSC முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

UPSC ESE Result 2020: யுபிஎஸ்சி இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வு முடிவுகள் (Engineering Service) வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Feb 2020, 8:36 am
Union Public Service Commission (UPSC) எனப்படும் யுபிஎஸ்சி தேர்வாணையம், இன்ஜினியரிங் சர்வீஸ் பணிக்கு நடத்திய முதன்மைத் தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் இதனை https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.
Samayam Tamil UPSC 2020 Exam


UPSC Engineering Services Prelims தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்தாண்டு செப்டமர் மாதம் வெளியானது. இந்த தேர்வு கடந்த ஜனவரி 5 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது முதனிலைத் தேர்வு முடிவுகள் UPSC ESE Result 2020 அறிவிக்கப்பட்டுள்ளது.

முதனிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களின் விவரங்கள் www.upsc.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் நேரடியாக UPSC அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று, முடிவுகளை பார்க்கலாம்.

முதனிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்கள், அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு UPSC ESE Mains 2020 அழைக்கப்படுவர். மெயின் தேர்வு ஜூன் 28 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஹால்டிக்கெட் மூன்று வாரங்களுக்கு முன்பாக ஆன்லைனில் வெளியிடப்படும்.

இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வு முடிவுகளை UPSC ESE Result 2020 தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.

அடுத்த செய்தி