ஆப்நகரம்

11, 12 ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வா?

11, 12 ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள், இனி ஒரே தாளாக மாற்றி தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 25 Apr 2018, 10:27 am
11, 12 ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள், இனி ஒரே தாளாக மாற்றி தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil cbse-x-exam_d32a9898-c726-11e6-afe5-88e9648d1b9f


தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் , தற்போது உள்ள கல்வித்திட்டத்தின்படி 11, 12 ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு தாள் 1, 2 என இரண்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் மொழிப்பாடங்களுக்கு 4 தேர்வுகள் எழுதுகின்றனர். இதுதவிர முக்கியப் பாடங்களாக 4 உள்ளன. இவற்றை சேர்த்தால் மொத்தம் 10 முறை மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்களின் இந்த தேர்வுச் சுமையை குறைக்கதமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மாணவர்களின் தேர்வு சுமையை குறைப்பதற்காக மொழிப்பாடங்களின் தாள் 1, 2 ஆகிய இரண்டையும் இணைத்து ஒரே தேர்வாக நடத்த திட்டமிட்டுள்ளது.இதுபோலவே வணிகவியல் ( Commerce)மற்றும் கணக்குப்பதிவியல் (Accountancy) ஆகிய இரண்டு பாடங்களையும் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு டெல்லியிலும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி