ஆப்நகரம்

பி.இ படிக்க கெமிஸ்டரி தேவையில்லை: AICTE முடிவு

இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கு வேதியியல் கட்டாயமில்லை என்று AICTE குழு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 13 Feb 2020, 5:12 pm
இன்ஜினியரிங் சேருவதற்கு பிளஸ் டூவில் கெமிஸ்டரி படிப்பது கட்டாயமில்லை என்று ஏ.ஐ.சி.டி.இ (AICTE) தெரிவித்துள்ளது.
Samayam Tamil AICTE


All India Council for Technical Education (AICTE) எனப்படும் அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நடப்பு கல்வியாண்டிற்கு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி, பொறியியல் படிப்பில் சேருவதற்கு வேதியியல் படிப்பு கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இன்ஜினியரிங் படிப்பில் சேர வேண்டுமென்றால், பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், கம்ப்யூட்டர் சைன்ஸ் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது.

இந்த சூழலில் ஏஐசிடிஇ கல்விக்குழு தற்போது பொறியியல் படிப்பிற்கான விதிமுறைகளை திருத்தி வருகிறது. அதன்படி, இன்ஜினியரிங் படிப்பிற்கு பிளஸ் டூவில் வேதியியல் படிப்பு கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது. அதாவது, கட்டாயப் படிப்பில் இருந்து வேதியியல் பாடம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறை நடப்பு 2020-21 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய விதிமுறைகள் பற்றிய சுற்றறிக்கை அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட உள்ளது.

முன்னதாக பொறியியல் படிப்பிற்கான கல்விக்கட்டணத்தை திருத்துவதற்கும் அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்ஜினியிரிங் கல்விக்கட்டணம் 1.50 லட்சம் ரூபாய் வரையில் உயரும் அபாயம் உள்ளது.

மேலும், இன்ஜினியரிங் கல்லூரிகளில் பேராசிரியர், உதவி பேராசிரியர்களுக்கு 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊதியம் உயர்வு வழங்குமாறும் ஏ.ஐ.சி.டி.இ வலியுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி