ஆப்நகரம்

50 பட்டப்படிப்புகள் அரசு வேலைக்கு ஏற்றதல்ல என அறிவிப்பு!

50 பட்டப்படிப்புகள் அரசு வேலைக்கு ஏற்றதாக இல்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

Samayam Tamil 17 May 2019, 2:46 pm
50 பட்டப்படிப்புகள் அரசு வேலைக்கு ஏற்றதாக இல்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
Samayam Tamil pathology


தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் சமநிலைக் குழு கூட்டம் நடத்தியது. இதில், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலர், நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது சில குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டப்படிப்புகள் அரசு வேலைக்கு ஏற்றதாக இல்லை என்பது முடிவு செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக அரசாணை வெளியீடும்படி, தமிழக அரசுக்கு டிஎன்பிஎஸ்சி வலியுறுத்தியது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் 50 பட்டப்படிப்புகள் அரசு வேலைக்கு ஏற்றதாக இல்லை என்று அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஏற்கனவே, கடந்தாண்டு 33 பட்டபடிப்புகள் அரசு வேலைக்கு தகுதியில்லை என்று கூறப்பட்டது. இந்தாண்டும் அதே போல் அரசாணை வெளியிடுகிறது. குறிப்பாக பெரியார் பல்கலைக்கழகத்தின் பி.சி.ஏ., பட்டப்படிப்பு, திருவள்ளூவர், பெரியார், பாரதியார் பல்கலைக்கழகத்தின் அப்ளைடு சயின்ஸ், அப்ளைடு மைக்ரோ பயோலாஜி, எம்எஸ்சி மைக்ரோ பயோலாஜி இவ்வாறு 50க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் அரசு வேலைக்கு ஏற்றதாக இல்லை என்று அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி