ஆப்நகரம்

+2 படித்தவர்களுக்கு 5134 மத்திய அரசு பணியிடங்கள்!

+2 படித்தவர்களுக்கு 5134 மத்திய அரசு பணியிடங்கள்!

TOI Contributor 12 Oct 2016, 3:36 am
பிளஸ் 2 படித்தவர்களுக்கு 5134 காலி பணியிடங்களை மத்திய அரசின் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் டேட்டா என்ட்ரி மற்றும் கிளர்க் வேலைக்கான தேர்வினை அறிவித்துள்ளது. கம்பைன்ட் ஹையர் செகன்டரி லெவல் தேர்வு மூலம் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Samayam Tamil 5134 central government jobs for 2 candidates
+2 படித்தவர்களுக்கு 5134 மத்திய அரசு பணியிடங்கள்!


பணி விவரம் :

* போஸ்டல் அசிஸ்டென்ட் / சோர்டிங் அசிஸ்டென்ட் - 3281 பேர்
* டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் - 506 பேர்
* லோயர் டிவிஷன் கிளர்க் - 132 பேர்
* கிளார்க் - 26 பேர்

வயது வரம்பு :

2.01.1990ல் இருந்து 1.1.1999 இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 1.1.17ம் தேதியை கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணிகளுக்கு ஹிந்தி மற்றும் ஆங்கில தட்டச்சுத்திறன் தேவை.

தேர்வு முறை :

முதலில் எழுத்துத்தேர்வு நடைபெறும், அதில் தேர்ச்சி பெற்றால் டேட்டா என்ட்ரி மற்றும் கிளார்க் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தட்டச்சு தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரதி எடுத்து தேவையான சான்றுகளை இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பவேண்டும்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.11.16
தேர்வு நடைபெறும் நாட்கள் : 7.1.17, 5.2.17 மற்றும் 9.4.17

விபரங்கள் அறிய :

www.ssconline.nic.in

ஜூனியர் என்ஜினியர் பணிகள் :


இதே போல ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வினையும் எஸ்.எஸ்.சி அறிவித்துள்ளது. இது குறித்த விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி