ஆப்நகரம்

மட்டமான 800 பொறியியல் கல்லூரிகள் க்ளோஸ்!

குறைவான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட காரணங்களால் நாடு முழுதும் 800 பொறியியல் கல்லூரிகளை மூடப்பட வேண்டும் என ஏஐசிடிஇ தலைவர் அனில் தத்தாத்ரேயா கூறியுள்ளார்.

TOI Contributor 2 Sep 2017, 6:52 pm
பெங்களூரு: குறைவான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட காரணங்களால் நாடு முழுதும் 800 பொறியியல் கல்லூரிகளை மூடப்பட வேண்டும் என ஏஐசிடிஇ தலைவர் அனில் தத்தாத்ரேயா கூறியுள்ளார்.
Samayam Tamil 800 engineering colleges to close over low quality admissions
மட்டமான 800 பொறியியல் கல்லூரிகள் க்ளோஸ்!


பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பங்கேற்ற ஏஐசிடிஇ தலைவர் அனில் தத்தாத்ரேயா, வருடந்தோறும் 150 கல்லூரிகள் மூடப்படுகின்றன என்றார். மேலும், “பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களில் பெரும்பாலானவர்கள் எம்டெக் அல்லது பிஎச்டி முடித்தவர்களே. இவர்களுக்கு கற்பித்தலில் போதிய பயிற்சி இல்லை. இனி பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் ஆவதற்கு, 6 மாத கட்டாய பயிற்சி வேண்டும். தற்போது பணிபுரியில் உள்ளவர்களும் இந்த பயிற்சியில் சேர வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.

உட்கட்டமைப்பு வசதிகள், 5 ஆண்டுகளாக 30 சதவீதத்திற்கு கீழ் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும்.



2014-15ஆம் கல்வியாண்டில் 77 கல்லூரிகளும் 2015-16ஆம் கல்வியாண்டில் 125 கல்லூரிகளும் மூடப்பட்டன. 2016-17ஆம் கல்வியாண்டில் 149 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 2017-18ஆம் கல்வியாண்டில் இதுவரை 65 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன.

2014 முதல் தெலுங்கானாவில் அதிகபட்சமாக 64 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் 31 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன.

அடுத்த செய்தி