ஆப்நகரம்

KVS admission 2019: மத்திய அரசின் கேந்திரிய பள்ளியில் 2ம் வகுப்பு அட்மிஷனுக்கான விண்ணப்பம் துவக்கம்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில், இரண்டாம் வகுப்பு அட்மிஷனுக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 2 Apr 2019, 2:12 pm
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில், இரண்டாம் வகுப்பு அட்மிஷனுக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
Samayam Tamil kvs-admission-2019


நாடு முழுவதும் சுமார் 1,137 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு மூலம் இயங்குகிறது. மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்குவதால் இந்த பள்ளிகளுக்கு எப்போதும் மவுசு அதிகம். இதற்கு முன்பு வரை ஒன்றாம் வகுப்புகளுக்கான விண்ணப்பம் இருந்தது. அது மார்ச் 19ம் தேதியோடு நிறைவு பெற்றது. இதனையடுத்து இன்று முதல் இரண்டாம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் தொடங்கியுள்ளது.

இந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க நினைக்கும் பெற்றோர்கள், kvsonlineadmission.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு மாணவர்கள் குறித்த விபரங்கள் ஏப்ரல் 12 தேதி வெளியிடப்படும். அதன்பிறகு அம்மாணவர்களுக்கான அட்மிஷன் தொடங்கப்படும். ஏப்ரல் 30ம் தேதி வரை அட்மிஷன் நடைபெறும்.

அடுத்த செய்தி