ஆப்நகரம்

செமஸ்டர் வகுப்புகள் தொடக்கம் எப்போது... கால அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 7 Aug 2020, 7:31 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளை பொறுத்தவரை இறுதி ஆண்டு தேர்வு தவிர மற்ற தேர்வுகளையும், செமஸ்டர் தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
Samayam Tamil அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்


தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 500க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் நடைபெறவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 26ஆம் தேதி வரை பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என்றும், முதலாமாண்டு மாணவர்களை தவிர அனைத்து இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் தேதி வெளியாகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்!!

அத்துடன், அக்டோபர் 28 ஆம் தேதி முதல் நவம்பர் 9 ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், அடுத்த செமஸ்டருக்கான ஆன்லைன் வகுப்புகள் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி