ஆப்நகரம்

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது.

TNN 22 Jun 2016, 10:07 am
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது.
Samayam Tamil b e ranking list released in anna university by ministerv anbazhagan
பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு


தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சுமார் 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 722 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு வருகிற 27-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ரெண்டாம் எண் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். அதில், 7 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அபூர்வதர்ஷினி என்ற மாணவி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும். வருகிற 24-ம் தேதி விளையாட்டுப் பிரிவினருக்கும், மறுநாள் 25-ம் தேதியன்று மாற்றுத் திறனாளிகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 27-ம் தேதி தொடங்கி, ஒரு மாதம் நடக்கிறது. தினமும் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை அண்ணா பல்கலைக்கழக இணையதளத் தில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி