ஆப்நகரம்

பி.எட் மாணவர் சேர்க்கை : விண்ணப்ப விநியோகம் துவக்கம்

பி.எட் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

TNN 21 Jun 2017, 1:35 pm
சென்னை : பி.எட் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
Samayam Tamil b ed admission appilcation sales from today
பி.எட் மாணவர் சேர்க்கை : விண்ணப்ப விநியோகம் துவக்கம்


தமிழகத்தில் 13 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளனர். இந்த கல்லூரிகளில் 2017-2018ம் ஆண்டுகான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு ஜூன் 16-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் பி.எட் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை விநியோகம் செய்யப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஜுலை 3-ம் தேதி மாலை 3-மணிக்குகுள் சமர்ப்பிக்க கடைசி நாளாகும்.காலை 10 மணி முதல் 3 மணி வரை வார விடுமுறை நாட்களிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய முகவரி:
செயலர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-2018,
விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்
, காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி,
சென்னை 600005

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் :
திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்,
சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்,
குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி,
ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரி,
புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி,
கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி,
வேலூர் காந்திநகரில் அமைந்துள்ள அரசு கல்வியியல் கல்லூரி,
திண்டுக்கல் காந்தி கிராமில் அமைந்துள்ள லட்சுமி கல்வியியல் கல்லுரி,
சேலம் சாரதா கல்வியியல் கல்லூரி,
மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி,
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி,
பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி,
திருவட்டாறு என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரி

அடுத்த செய்தி