ஆப்நகரம்

கொரோனா வைரஸ் தொடர்பான சர்வதேச மாநாடு! மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைக்கிறார்!!

COVID-19 Global Conference: கொரோனா வைரஸ் பற்றி Global Online Conference on COVID-19: Fallout & Future என்ற தலைப்பில் உலகளாவிய மாநாடு நடைபெறுகிறது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைக்கும் இந்த கருத்தரங்கில், உலகம் முழுவதிலும் இருந்து மருத்துவ வல்லுநர்கள், பொருளாதார ஆலோசகர்கள், ஊடக நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

Samayam Tamil 9 Apr 2020, 3:35 pm
பென்னெட் பல்கலைக்கழகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் பற்றிய சர்வதேச கருத்தரங்கு நடைபெற உள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைக்கும் இந்த கருத்தரங்கில் நீங்களும் பங்கேற்கலாம். இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.
Samayam Tamil COVID-19 Global Conference


உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பென்னெட் பல்கலைக்கழகத்தின் சார்பில் ’கொரோனா வைரஸின் வீழ்ச்சியும் எதிர்காலமும்’ என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பற்றி இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச கருத்தரங்கு இதுவே ஆகும்.



இந்த கருத்தரங்கு இன்று (ஏப்.9) மாலை 4 மணி அளவில் தொடங்குகிறது. மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். மருத்தவத்துறை வல்லுநர்கள், ஊடக வல்லூனர்கள் கொரோனாவுக்கு எதிரான போரை பற்றி நேரடியாக பேசுகின்றனர்.

COVID-19 Conference இல் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள பொதுமக்கள், மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். நேரடியாக முன்பதிவு செய்ய இங்கு க்ளிக் செய்யவும். இன்று மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் மாநாடு நடைபெறும். மொத்தம் நான்கு அமர்வுகளாக கருத்தரங்கு நடைபெற உள்ளது.


முதல் அமர்வு:
கருத்தரங்கின் முதல் அமர்வு மாலை 4.30 முதல் மாலை 5.30 வரையில் நடைபெறுகிறது. இந்த அமர்வில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி பற்றி பேசப்படுகிறது. இதில் அரசின் முன்னாள் நிதி ஆலோசகர் அரவிந்த வீர்மணி, முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், பொருளாதார ஆலோசனை கவுன்சலின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ஷமீகா ரவி ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

இரண்டாம் அமர்வு:
இரண்டாம் அமர்வு மாலை 5.40 முதல் மாலை 6.40 வரையில் நடைபெறும். கொரோனா வைரஸ் குணமாக வெவ்வெறு நாடுகளில் எந்த மாதிரியான மருந்துகள் உபயோகிக்கப்படுகிறது என்பது பற்றி பேசப்படுகிறது. இதில் சீனாவின் ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழக பேராசிரியர் வென்ஜூவான் ஜங் கலந்து கொள்கிறார். மேலும், இத்தாலி நாட்டின் போலோக்னா பல்கலைக்கழக பேராசிரியர் பியட்ரைஸ் கலிலி உரையாற்றுகிறார்.

மூன்றாம் அமர்வு:
மூன்றாம் அமர்வு மாலை 6.50 மணி முதல் இரவு 8 மணி வரையில் நடைபெறுகிறது. இதில் கொரோனா பற்றிய தவறான தகவல்கள், செய்திகள், வதந்திகளை கடுப்படுத்துவது குறித்து கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் சிங்கப்பூரில் உள்ள கூகுள் நியூஸ் சர்வீஸ் தலைமையாளர் இரேனே ஜே லியூ கலந்து கொள்கிறார். மேலும், UK நாட்டில் உள்ள ரியூட்டர்ஸ் இதழியியல் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் ரஸ்மஸ் கெலீஷ் நைல்சன் , சுவீடன் நாட்டின் செய்திய அறிவியல் ஆசிரியர் சுமையா சேக் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நான்காம் அமர்வு:
நான்காம் அமர்வு இரவு 8 மணி முதல் 9 மணி வரையில் நடைபெறுகிறது. இதல் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஹார்வர்டு குளோபல் ஹெல்த் இன்ஸ்டியூட் இயக்குநர் ஆஷிஷ் குமார் ஜா விளக்கமளிக்கிறார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் தேசிய சுகாதார முகமையின் முன்னாள் துணை சிஇஓ தினேஷ் அரோரா உரையாற்றுகிறார். இந்தியா சார்பில் நாராயாண மருத்துவமனைகளின் தலைவர் தேவி ஷெட்டி பேசுகிறார்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் பற்றிய குழப்பங்களுக்கும், முழுமையான தெளிவான தீர்வுகள் இதில் கிடைக்கும். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு பென்னெட் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

அறிவிக்கை: Global Online Conference on COVID-19: Fallout & Future
முன்பதிவு செய்ய: Registration Link

அடுத்த செய்தி