ஆப்நகரம்

5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு.. ஆனால்..

தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 5,8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும். ஆனால், பெயில் கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Samayam Tamil 18 Sep 2019, 2:49 pm
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு, ஆனால், மாணவர்கள் யாரும் தோல்வியடைய மாட்டார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tn public exam


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது போல், இனி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்திருந்தார். இந்த தேர்வு மத்திய அரசு கொண்டு வருவதாகவும், ஆனால், தமிழகத்துக்கு விலக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில், தற்போது 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் ஆனால், அதில் மாணவர்கள் யாரும் தோல்வியடைய மாட்டார்கள் என்றும் புதிய அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று (புதன்) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘தமிழகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு உண்டு. ஆனால், பெயில் கிடையாது. இந்த 3 ஆண்டுகளில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காகவே விலக்கு வாங்கப்பட்டுள்ளது’. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதே போல், பிளஸ் 1, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுகள் ஷேர் சாட், வாட்ஸ்அப்பில் கசிந்துள்ளதாக தகவல்கள் பரவியது. அதற்கு மறுப்புத் தெரிவித்த அமைச்ச்ர் செங்கோட்டையன், அவை அனைத்தும் முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்