ஆப்நகரம்

தமிழ்நாட்டில் புதிய மத்தியப் பல்கலைக்கழகம்: ரூ.3,639 கோடி ஒதுக்கீடு

பல்கலைக்கழக வளாகத்தின் கட்டமைப்புப் பணிகளுக்காக மத்திய அரசின் நிதி செலவழிக்கப்படும் எனவும் 36 மாதங்களில் இந்தப் பல்கலைக்கழகங்கள் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Jan 2019, 5:51 am
தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களில் புதிய மத்தியப் பல்கலைக்கழகங்களைத் உருவாக்க ரூ. 3,639.32 கோடி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Samayam Tamil _மத்திய_பல்கலைக்கழகம்_09022 (1)

மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம் 2009-ன் கீழ் 13 புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்க மத்திய அமைச்சரவை ரூ. 3,639.32 கோடி ஒதுக்கீட்டு செய்துள்ளது.

இது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, பீகார், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, ஒரிசா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மத்தியப் பல்கலைக்கழகமும் ஜம்மு காஷ்மீரில் இரண்டு மத்தியப் பல்கலைக்கழகங்களும் புதிதாகத் தொடங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தின் கட்டமைப்புப் பணிகளுக்காக மத்திய அரசின் நிதி செலவழிக்கப்படும் எனவும் 36 மாதங்களில் இந்தப் பல்கலைக்கழகங்கள் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி